எர்ணாகுளத்தில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது! அல்கொய்தா அமைப்புடன் தொடர்பா?

Photo of author

By Parthipan K

என்.ஐ.ஏ. பிரிவினரால் தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பினால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும்,  தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் என்னும் ஊரில் தீவிரவாத கும்பலை சேர்ந்த மூன்று பேர் என்.ஐ.ஏ. பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து  வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்  இந்த மூன்று நபர்களுக்கும் தொடர்புடைய ஆறு நபர்களை மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அல்-கொய்தா தீவிரவாத பிரிவினரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதைப்பற்றி என்.ஐ.ஏ. தரப்பில் கேட்கும்போது அவர்கள் கூறியது என்னவென்றால், “ தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், அவர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்களை கண்டறிந்து  தீவிரவாதிகளை கைது செய்வதுமே எங்களின் முழுநேர வேலை என்றும் அதில் மும்முரமாக செயல்பட்டு கொண்டு வருகிறோம்”  என்றும் தெரிவித்தனர்.