அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!!

Photo of author

By Sakthi

அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!

அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் பென்சிலோனியா மாநிலத்தில் ஒரு வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 33 வயது உள்ள வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சம்பவம் அறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் குண்டு அடிபட்டு உயிருக்கு போராடிய அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் சுட்டுக் கொள்ளப்பட்ட மாணவர்கள் 19 வயதுடைய ஜோசுபா லூசோ, 8 வயதுடைய ஜீசஸ் பெரோஸ், 9 வயதுடைய ஜெபாஸ்டியான் என்பது தெரியவந்தது. வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தை நிகழ்த்திய அந்த மர்ம நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் அந்த மர்ம நபர் எதற்காக துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரியவரும்.