பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பரிதாப பலி!

Photo of author

By Sakthi

பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம் கம்பன் நகரை சேர்ந்த வைத்தியலிங்கம் பால் வியாபாரி இவருக்கு அவருடைய வீட்டின் அருகே சொந்தமாக இருக்கின்ற நிலத்தில் ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட பழமையான மாட்டுக் கொட்டகை ஒன்று இருக்கிறது. இதனை கடையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அதற்காக கொட்டகையின் ஒரு பகுதியில் மண்ணை நிரப்பி வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மாலை வைத்தியத்தில் மனைவி ராமாயி, அவருடைய தாய் பூவாயி வைத்தியலிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள், அவருடைய மனைவி கற்பகம், உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் பலமில்லாத சுவர் இடிந்து விழுந்தது. சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் 3 பேரும் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்கள்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தைச் சார்ந்தவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலமாக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமாயி பரிதாபமாக உயிரிழந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கற்பகம் பூவாயி உள்ளிட்ட இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பலியாகினர், இது குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.