தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் பிஸியாக இருக்கும் மூன்று எழுத்து நடிகர்!! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
114
Three writing actors who will be busy in the next film to follow !! Fans in anticipation of the climax !!
Three writing actors who will be busy in the next film to follow !! Fans in anticipation of the climax !!

தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் பிஸியாக இருக்கும் மூன்று எழுத்து நடிகர்!! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து உலக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும இதுவரை 40 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார். இவர் கதை ஆசிரியராகவும் பின்னணி பாடகராகவும் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

அவர் நடிப்பில் அண்மையில் உருவான கர்ணன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெருமளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவான ஆண்மையின் ஓடிடி தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரை படம் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதை தொடர்ந்து இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் 43 வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும் இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் பெருமளவில் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்கள் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தை சேகர் கம்மலு என்பவர் இயக்குகிறார் என ஏற்கனவே தகவல் வந்திருந்தது. இதை தொடர்ந்தது அந்த படத்திற்கு முன்னதாக தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை சிதாரா என்டர்டைன்மென்ட் தயாரிக்கின்றது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

author avatar
CineDesk