தூக்கி வீசப்பட்ட இளைஞர் – பதற வைத்த சி.சி.டி.வி. காட்சி!
தெலுங்கானா மாநிலத்தில் செரியல் மாவட்டத்தில் ஜன்னாரம் பகுதியை நோக்கி இரண்டு இளைஞர்கள் மிக வேகமாக சென்றனர்.அந்த நேரத்தில் தபல்பூர் சோதனைசாவடியில் வனத்துறை அதிகாரி கேட்டை கீழே இறக்கிவிட்டு அந்த இளைஞர்களை நிறுத்த சொல்லி கை அசைத்தார்.
ஆனாலும் வேகமாக வண்டியை ஓட்டி வந்த இளைஞர் தலையை குனிந்து தடுப்பு கேட்டை கடந்து விடலாம் என நினைத்து அப்படியே சென்றார்.
ஆனால் இதில் பின்னால் அமர்திருந்த இளைஞர் கேட்டில் பலமாக மோதி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக சம்பவயிடத்திலேயே உயிரை விட்டார்.ஓட்டி வந்த இளைஞரோ சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதை பற்றி விசாரிக்கையில் உயிரிழந்த நபரின் பெயர் சுதேனி வெங்கடேஷ் கவுட் என தெரிவிக்கப்பட்டது.வண்டியை ஓட்டியவர் லக்செட்டி பேட்டை மண்டலத்தில் உள்ள கோத்தக்கு முகுதேம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி சந்திரசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எதற்கு இந்த அவசரம்.பொறுமையை கடைப்பிடித்து இருந்தால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்குமா? என அனைவரும் பதைபதைத்தனர்.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சி.சி.டி.வி.ல் பதிவாகி இருந்தது.