பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த பூ பற்றி தெரியுமா? துன்பத்தை போக்கும் தும்பை..!!

0
236
Thumbai Poo

Thumbai Poo: ஒரு சில செடிகளில் மருத்துவக்குணம் அதிகம் இருப்பதால் நாம் காலங்காலமாக அதனை மறவாமல் இருப்பதற்கு நாம் கொண்டாடும் பண்டிகைகளில் அவற்றை வைத்து பயன்படுத்தி வந்தோம். ஆனால் அது காலப்போக்கில் அன்மீகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் செடிகளாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட செடிகளின் ஒன்று தான் இந்த தும்பை (thumbai chedi). அந்த தும்பையில் வெள்ளை நிற பூக்கள் இருக்கும். கிராமத்தில் வளர்ந்த 80ஸ், 90ஸ் பிள்ளைகளுக்கு இந்த பூக்கள் என்றால் அவ்வளவு சந்தோஷம். இந்த பூக்களை பறித்து பிள்ளையார் பிடித்து அதன் மேல் இதனை வைத்து விளையாடுவார்கள். மேலும் இந்த பூவின் அடிப்பகுதியில் ஒரு சிறு புள்ளி தேன் இருக்கும். அதனை ஊறிஞ்சுவதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் இந்த செடியை சுற்றி எப்பொழுதும் வண்ணத்துப்பூச்சி கூட்டங்கள் பறந்துக்கொண்டே இருக்கும். நாம் இந்த செடியின் பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

தும்பை

தும்பை ஒரு மூலிகைச்செடியாகும். இதில் பல வகைகள் உள்ளன. இதில் வெண்மை நிற அழகான பூக்கள் பூக்கும். மேலும் இந்த செடிகள் வயல் வரப்புகள், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. விஷ சந்துக்களால் ஏற்படும் நச்சுவை போக்கும் தன்மை கொண்டது இந்த தும்பை செடி.

தும்பை பூ பயன்கள்

தமிழர்கள் இது போன்ற மூலிகை செடிகளை மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று, ஆவாரம் பூ, சிறுகண்பீளை பூ, தும்பை பூ கொண்டு பண்டிகையை கொண்டாடி வந்தனர். மேலும் கிராமங்களில் இந்த பூவில் 2 எடுத்து பாெங்கல் செய்யும் போது அதில் போடுவார்கள்.

ஒற்றை தலைவலி உள்ளவர்கள் இதன் சாறு எடுத்து மூக்கில் 2 சொட்டு விட்டால் தலைவலி குணமாகிவிடும்.

இந்த செடியின் இலையை அரைத்து அதன் சாறு எடுத்து பாம்பு போன்ற விஷ சந்துக்கள் கடித்துவிட்டால் அதன் விஷத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது இந்த தும்பை செடி. தும்பை செடியின் இலையை கசக்கி 3 சொட்டு மூக்கில் விட பாம்பின் விஷம் குறையும் என கூறப்படுகிறது. மேலும் தேள், பூராண், போன்ற விஷக்கடிக்கும் சிறந்த மருந்தாகும்.

பூச்சிகள் கடித்த இடத்தில் இதனை தேய்த்து வர, பூச்சியால் ஏற்பட்ட காயங்கள், தேமல், அழற்ச்சி போன்றவை குணமாகிவிடும்.

இந்த தும்பை செடி சஞ்சீவி மூலிகையாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது சாகாத வரம் பெற்றவை, அழியாத ஒன்றை தான் சஞ்சீவி என்று கூறுகிறோம். அந்த வகையில் இந்த தும்பை செடியை நம்பினால் துன்பத்தை சிவபெருமான் போக்குவார் என நம்பப்படுவதும் உண்டு.

மேலும் தும்பை பூ, இலை, வேர் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டாவையாக உள்ளது. இதனை கொதிக்க வைத்து வடிக்கட்டி வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

நீண்ட நாள் சளி, தலைப்பாரம், தலையில் நீர்க்கோர்தல், இருமலுக்கு இந்த செடியை கொதிக்க வைத்து அருந்தி வந்தால் இவை அனைத்தும் குணமாகிவிடும்.

ஆன்மீக ரீதியாக தும்பை 

சிவப்பெருமானுக்கு உகந்த பூவாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த செடியை நாம் மந்திரம் கூறி எடுத்தால் அது நம் கர்ம வினைகளை நீக்கும் என நம்பப்படுகிறது. அவ்வாறு பிடுங்கி எடுக்கப்படும் தும்பை செடியை மந்திரம் கூறி நமக்கு ஏற்பட்டிருக்க கூடிய நோய்களுக்கு பயன்படுத்தினால் அந்த நோய் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை.

மேலும் இராமாயணத்தில் இராவணன் போருக்கு செல்லும் போது இந்த தும்பை பூ மாலை அணிந்துக்கொண்டார் என்பது வரலாறு. மேலும் இராமனும் தான் அணிந்திருந்த துளசி மாலையுடன், தும்பை பூ மாலையும் அணிந்துக்கொண்டார்.

மேலும் படிக்க: மது பழக்கத்தை மறக்க வேண்டுமா? மகா குடிகாரர்கள் கூட இதை குடித்தால் திருந்தி விடுவார்கள்..!!