இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் கன மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து மழையின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தென்னிந்திய மீது வளிமண்டல கீழ் அடக்குகளில் கிழக்கு மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.