வரும் 9-ம் தேதி வெளியாகும் துணிவு படத்தின் முதல் பாடல் …

0
391

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வரும் துணிவு படம்
பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. இந்த நிலையில், துணிவுப்படத்தின் முதல் பாடலான சில்லா சிலா பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டிவிட்டரில் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Previous articleவிஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் டீசர் வெளியானது…
Next articleதொழில் அதிபரை கரம் பிடித்த ஹன்சிகா….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here