Thuthuvalai Thuvaiyal: சளி ஜலதோஷம் இருமல்? தூதுவளை துவையல் செய்து சாப்பிடுங்கள்..!

Photo of author

By Priya

Thuthuvalai Thuvaiyal: சிலருக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகளை உண்டு வந்தாலும், சளி குணமாகுவதில்லை. ஆனால் ஒரு முறை இந்த தூதுவளை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாட்களாக இருந்து வந்த சளி வெளியேறிவிடும். இந்த தூதுவளை துவையல் எப்படி செய்வது என்று நாம் இந்த பதிவில் (thuthuvalai thuvaiyal recipe in tamil) காணலாம்.

தேவையான பொருட்கள்

  • தூதுவளை – 1 கப்
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • வர மிளகாய் – 1
  • மிளகு – 1/2 ஸ்பூன்
  • பூண்டு – பல்
  • புளி – எலுமிச்சை பழ அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தூதுவளை இலையை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அதில் சீரகம், மிளகு, வர மிளகாய், பூண்டு, சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு வதக்கியதை ஆற விட வேண்டும்.

மிக்ஸி ஜாரில் வதக்கிய அனைத்தையும் சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அதனுடன் புளி, தேவையான அளவு உப்பு, சேர்த்து அரைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள சளி குணமாகும்.

தூதுவளை இலையை தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பிறகு குடித்தால் சளி (thuthuvalai benefits in tamil) குணமாகும்.

மேலும் படிக்க: இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை.. மஞ்சள் காமாலையை அடியோட நீக்க இதோ எளிய இயற்கை வைத்தியம்!!