டெல்லியை சேர்ந்த 16 வயது டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் சிக்கர் ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவரை டிக்டாக்கில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு ஷாஹ்தாராவில் உள்ள இவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய டிசிபி அமித் சர்மா தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் சியா கக்கர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
கடைசியாக சியா கக்கர் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு டிக்டாக் செய்து அதனை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.