டிம் சவுத்தியின் அதிரடியான பந்துவீச்சு… 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து…

0
80

டிம் சவுத்தியின் அதிரடியான பந்துவீச்சு… 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து…

 

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அவர்களின் சிறப்பான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

தற்பொழுது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.

 

நியூசிலாந்து மற்றும் யுனைடெட் அரபு எமாரேட்ஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்17) துபாயில் நடைபெற்றது. இதால் டாஸ் வென்ற யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து களமிறங்கிய நியூசாலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.

 

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சைப்ரட் அரைசதம் அடித்து 55 ரன்கள் சேர்த்தார். மெக்கொன்சி 31 ரன்களும், நீசம் 25 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 21 ரன்களும் சேர்த்தனர். யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியில் பாசில் ஹமீத், ஜூனைட் சித்திக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் முகமது ஃபராசுதீன், ஜாஹூர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து யு.ஏ.இ அணிக்கு வெற்றி பெறுவதற்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் டிம் சவுத்தி அவர்களின் பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

 

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

 

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆர்யன்ஸ் ஷர்மா அவர்கள் அரைசதம் அடித்து 60 ரன்கள் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய டிம் சவுத்தி 25 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சேன்டினர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய டிம் சவுத்தி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்த போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

நியூசிலாந்து மற்றும் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி மோதும் 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

 

Previous articleஅரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?
Next articleதொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!