அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?

0
32

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?

 

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

 

2021 ஆம் ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தலிபான் அமைப்பு அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தூங்கும்போது கூட துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் தூங்குவார்கள் என்று தலிபான் அமைப்பினரை கூறுவார்கள். அப்படிப்பட்ட தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் முழு நாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது.

 

அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.  அழகு நிலையங்கள் செயல்படக்கூடாது, இசைக் கேட்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முடக்கியுள்ளது. இதனால் சிறையில் அடைப்பட்ட கிளிபோலதான் ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசாங்கத்தின்  அமைச்சர் அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பொது சேவை மனப்பான்மை உடன் செயல்படுவதில்லை எனவும் அவர் குற்றச்சாட்டி உள்ளார்.

 

இதுகுறித்து தலிபான் அரசாங்கத்தின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறியதாவது, ‘‘ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை’’ என்றார்.

author avatar
Parthipan K