ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் காற்று மாசுபடுவதை தவிர்ப்பது.
காற்று மாசுபாடு என்பது ஆபத்தான துகள்கள், வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியிடப்படும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசுபடுவதால் அதனை மக்கள் சுவாசிக்கும் போது அவர்களின் உடல் நலம் பாதிக்கும். எனவே மக்களின் உடல் நலத்தைக் கருதி அரசு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி காலை 6மணி முதல் 7மணி வரையும், இரவு 7மணி முதல் 8மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத்தளங்கள், மருத்துவமனைகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள், எளிதில் தீப்பிடிக்க கூடிய இடங்கள் அதாவது குடிசை பகுதி போன்ற இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
குறைந்த ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் பாதுகாப்பான சூழலில் பட்டாசு வெடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே அரசின் விதிமுறைகளை ஏற்று அனைவரும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.