நமது உடலின் எந்த ஒரு பிரச்சனைக்கும் நமது உணவே நல்ல மருந்தாகிறது.வளர்ந்து வரும் நாகரிக மாற்றத்தாலும் வேலைச்சுமையாலும் நாம் உண்ணும் உணவில் கவனிப்பு இல்லாமல் சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவமனையை நாடுகிறோம்.நமது உடலில் இரத்த செல்களை அதிகரிக்க எந்த மருந்து மாத்திரையும் டானிக்கும் தேவை இல்லை இயற்கையான உணவுகளே போதும்.
• தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளில் இரண்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வருகையில் உடம்பில் உள்ள ரத்த செல்கள் அதிகரிப்பதோடு இரும்புச்சத்தும் நமது உடலிற்கு கிடைக்கக்கூடும்.
• வாரம் இரண்டு முறையாவது முருங்கைக் கீரை அல்லது முருங்கைப்பூ பொரியல் செய்து சாப்பிட்டு வருகையில் உடலில் ரத்தச் செல்கள் அதிகரிக்கக்கூடும்.
• இரண்டு முறையாவது சுண்டைக்காய் வத்தல் செய்து சாப்பிட்டு வருவதாலும் ரத்தம் அதிகரிக்கும்.
• கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை தினமும் பயன்படுத்தி வருகையில் இரத்தம் அதிகரிக்கும்.
• முளைக்கட்டிய சுண்டல் அல்லது பாசிப்பயிறு வாரம் 4 முறையாவது சாப்பிட்டு வரவேண்டும்.
• உலர் திராட்சை தினமும் 4 சாப்பிடுகையில் உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
• பீர்க்கங்காயை வாரம் இரண்டு முறை சாப்பிடுகையில் உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
• நெல்லிக்காயை தினமும் ஒன்றாவது சாப்பிடுகையில் உடலின் ரத்த சிவப்பு செல்களும் உடலின் வெள்ளை செல்களும் அதிகரிக்கும்.
• பீட்ரூட் ஜூஸ் தினமும் 100 மில்லி லிட்டர் குறித்து வருகையில் ரத்தம் அதிக அளவில் அதிகரிக்கும்.
• மாதுளை பழத்தை வாயில் மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்தம் அதிகரிக்கும்.