திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி!  

Photo of author

By Rupa

திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி!

விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த சில நாட்களாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசி வரும் நிலையில், இவ்வாறு அவர் பேசியதற்கு பாஜக சட்டநிலைக் குழு உறுப்பினர் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் மீது வழக்கு தொடுத்தார்.

மேலும் திருமாவளவன் இவ்வாறு பேசியது குறித்து பாஜக சட்டநிலை உறுப்பினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பி இவ்வாறு ஒரு அமைப்பு குறித்து அவதூறாக பேசுவது மிகவும் தவறு. அந்த வகையில் கடந்த மாதமே இவர் மீது புகார் அளித்து இவர் மீது வழக்கு தொடுக்கும்படி காவல்துறையை நாடிய போது இந்த வழக்கை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இதனையடுத்து திருமாவளவன் அவதூறு பேச்சு குறித்து உட்ச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டு, திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசி இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் திருமாவளவன் மீது 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

இதனால் அவர் பதவி பறிபோகுமா என்று அரசியல் சுற்றுவட்டரங்கள் பேசி வருகின்றனர்.அதுமட்டுமின்றி திருமாவளவன் மீது வழக்கு போடப்பட்டால் அவர் கைது செய்யபடுவார் என்றும் கூறி வருகின்றனர்.