இனி சென்னையிலும் திருப்பதி லட்டு – மொத்தமாக வாங்கி விநியோகம் செய்ய அலைபேசி எண்!

0
130

கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களால் நிரம்பி வழியும். ஆனால் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக வழிபாட்டு தலங்கள் களையிழந்து காணப்படுகின்றன.

அதுவும் திருப்பதிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் சோகத்திலுள்ளனர். இருந்தாலும் தங்கள் காணிக்கையை இ-ஹுண்டி வழியாக செலுத்தி வரும் நிலையில், இந்தியா முழுவதுமுள்ள ஏழுமலையான் பக்தர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது திருப்பதி லட்டின் விலை 50 ரூபாயிலிருந்து பாதியாக 25 ரூபாய்க்கு குறைத்துள்ள தேவஸ்தானம், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திருப்பதி லட்டுகளை மானிய விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் எந்த தேதியிலிருந்து லட்டு விற்பனை செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் திருப்பதி லட்டை மொத்தமாக வாங்கி இலவசமாக விநியோகிக்க வேண்டும் என நினைக்கும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் துணை நிர்வாக தலைவரை 9849575952, 9701092777 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபேருந்து வசதிக்கு இந்த எண்களை அணுகவும் – அசத்தும் மாநகர போக்குவரத்துக் கழகம்
Next articleஈரோட்டில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி