அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!!
அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்ற உண்மையை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகை அன்று ஆதாரத்துடன் நிருபிக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. வெங்கடாசலபதி குடியிருக்கும் சேஷாச்சலா மலைத்தொடரில் 7 மலைகள் அமைந்துள்ளது. சேஷாத்ரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷாபாத்ரி, நாரயனாத்ரி, வெங்கடாபாத்திரி என 7 மலைத் தொடர்கள் உள்ளன.
இதனால் தான் திருப்பதியை சப்தகிரி மலை என்றும் வெங்கடாசலபதியை ஏழுமலையான் என்றும் கூறுகின்றனர். புறாங்களில் ஆஞ்சநேய சாமி அஞ்சனாத்திரி மலையில் தான் பிறந்தார் என்று பலராலும் நம்பப்பட்டு வருகிறது. இதனை உண்மைதான் என்று கண்டறிய திருப்பதி தேவஸ்தானம் 6 பண்டிதர்கள் கொண்ட குழு ஒன்றினை அமைத்து.
ஆராய்ச்சியின் முடிவில் ஆஞ்சநேய சாமி அஞ்சனாத்திரி மலையில் தான் பிறந்துள்ளர் என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஆதாரத்துடன் வரும் 13 ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. அங்கு ஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனாதேவிக்கும் ,ஆஞ்சநேயர்ருகும் கோவில் ஒன்றினை கட்டி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.