திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அவர்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திடீரென்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது.
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் ஊழல் செய்தார் என்று தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து முதல்வர் சந்திரபாபூ நாயுடு அவர்கள் கூறியதற்கு எதிராத ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அது மட்டுமில்லாமல் பாஜக கட்சி சார்பாக பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் உள்பட பலரும் நீதிமன்றத்தில் லட்டு விவகாரம் தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் இன்று நீதிபதி பி ஆர் கவாய் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பி ஆர் கவாய் அவர்கள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இது தொடர்பாக நீதிபதி பி ஆர் கவாய் அவர்கள் “திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக வெளியில் பேசியது ஏன்? வட்டி விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த முடிவு வருவதற்கு முன்னரே ஏன் ஆந்திர முதல்வர் லட்டு விவகாரம் தொடர்பாக வெளியில் பேச வேண்டும்.
விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது. லட்டு விவகாரம் தொடர்பாக பொது வெளியில் பேசுவதற்கு முன்பு கலப்படம் உள்ளதா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் ஆந்திர முதல்வர் முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசிவிட்டார்.
அரசியலமைப்பு சட்டப்படியில் மாநிலத்தின் உயர் பதவியில் இருக்கும் முதல்வர் அவர்கள் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இதற்கு முன்னர் எத்தனை ஒப்பந்ததாரர்கள் லட்டு தயாரிக்க நெய்யை வழங்கினர். அத்தனை நெய்யிலும் கலப்படம் இருந்ததா?
கலப்படம் செய்யப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதியாக தெளிவுபடுத்தப்படவில்லை. திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதா இல்லையா என்பது குறித்து ஜூலை மாதம் ஆய்வு செய்து டிசம்பர் மாதம் வெளியிட்டது எதற்தாக.
முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள் லட்டு விவகாரம் தொடர்பாக நேரடியாக ஊடகங்களுக்கு எடுத்து சென்றது எதற்காக? பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இது போன்ற ஒரு அறிக்கையை மாநில அரசு வெளியிட்டிருக்க கூடாது.
எனவே திருப்பதி லட்டு விவகாரத்தில் மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டுமா அல்லது வேறு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமா என்பது தொடர்பாக மத்திய அரசின் முடிவு முக்கியம். ஆக மத்திய அரசின் முடிவை அறிய இந்த வழக்கை வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கின்றேன்” என்று கூறினார்

