மேலும் ஒரு எம்.பி.க்கு கொரோனா தொற்று

Photo of author

By Parthipan K

திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததன் காரணமாக தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் அங்கு கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு அர்ச்சகர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.