கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

0
200

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தான்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்து அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த விவகாரம் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் மேலும் ஒரு சம்பவம் கொங்கு மண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி இவர் நேற்று காலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.பதறி போன பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிறுமி வயிற்றை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கதிரேசன் (வயது 23) என்பவன் தன்னை கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறினார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Previous articleசாமானியர்களை கலங்கடிக்கும் தங்கம் விலை?
Next articleகவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here