திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் வலைதள பதிவால் குழம்பிப்போன மக்கள்! விளக்கம் அளித்த கல்வித்துறை அதிகாரிகள்!

0
252

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி உள்ளிட்ட நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகவே பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 5 வட்டங்களில் விடுமுறை இல்லை எனவும் திருவள்ளூர் ஆவடி பூந்தமல்லி பொன்னேரி உள்ளிட்ட 4 வட்டங்களில் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மாவட்டத்தோடு அடங்கியுள்ள திருவொற்றியூர், மாதவரம், மதுரவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட தாலுகாக்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துவிட்டார் என்று திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இது பொது மக்களுடைய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட தாலுகாக்கள் திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் வருவதால் இதற்கான விளக்கத்தை கல்வித்துறை அதிகாரிகள் வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleபால் விலையை திரும்ப பெறுக! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Next articleமாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனர்! திருப்பூரில் அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here