பெண்கள் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது! அன்புமணி ராமதாஸ்!

0
79

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மருத்துவர் ராமதாஸ், உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு அவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு மிக அதிகமாகவே இருக்கிறது இதன் காரணமாக எதிர்கட்சியான திமுக பற்றி அதிர்ச்சி அடைந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த விதத்தில் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுகவிடம் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதாவது அறிஞர் அண்ணா தமிழகம் முன்னேற வேண்டும் அதோடு தமிழக மக்களும் முன்னேற வேண்டும் என்ற காரணத்திற்காக திமுகவை ஆரம்பித்தார்.

ஆனால் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே முன்னேறி இருக்கிறது. அவருடைய குடும்பம் மட்டும் தான் முன்னேற வேண்டும் என்ற காரணத்திற்காக அறிஞர் அண்ணா அந்த கட்சியை ஆரம்பித்தாரா திமுக என்ற குடும்ப கம்பெனியில் வெறும் நிதி மட்டும்தான் இருக்கிறது. கருணாநிதி, உதயநிதி, தயாநிதி என்று இன்னும் பல நிதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

ஸ்டாலின் ஒரு நிகழ்வில் பேசுகிறார் ஒரு காலத்தில் பானை ஓலையில் எழுதிவைப்பார்கள் என தெரிவித்திருக்கிறார். பனை ஓலையில் எழுதி வைப்பார்கள் என்று தெரிவிப்பதற்கு பதிலாக இவ்வாறு உளறிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரை பொருத்தவரையில் 14 ஆயிரம் கோடியில் 5 ஆயிரம் கோடி போனால் மீதி 7000 கோடி என்பது அவருடைய கணக்கு அந்த அளவிற்கு அவர் கணக்கில் புலியாக இருக்கிறார். சட்டசபையில் சட்டையைப் பிடித்துக்கொண்டு பனியனுக்கு விளம்பரம் கொடுப்பதைத் தவிர்த்து வேறு என்ன சாதனையை ஸ்டாலின் புரிந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

திமுக என்ற கட்சி தமிழக பெண்களுக்கு எதிரான கட்சி அதோடு திமுக வரலாறு தொடர்பாக நாம் பார்த்தோமானால், பெண்களை தெய்வமாக மதிக்கும் இந்த தமிழக மண்ணில் பெண்கள் குறித்து அவதூறாக பேசுகிறார்கள். தாயைப் பற்றி தவறாக பேசுவதற்கு ராசாவிற்கு என்ன அருகதை இருக்கின்றது. இதனை திமுக தலைவர் கண்டிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம் அப்படி இருக்கையில், திமுக பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது எந்த தைரியத்தில் என்று தெரியவில்லை. எப்படியாவது கள்ள ஓட்டு போட்டு நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

பெண்களுக்கு ஒரு கட்சியில் மதிப்பு இல்லை என்று சொன்னாலும் வாக்களிக்கும் சமயத்திலாவது அவர்கள் தொடர்பாக எந்த ஒரு அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருப்பது அரசியல் கட்சிகளின் மரபு. ஆனால் அதையும் தாண்டி தேர்தல் நெருங்கி வரும் காலத்திலும் கூட பெண்கள் தொடர்பாக பல அவதூறு கருத்துக்களை தெரிவிக்கிறது ஒரு கட்சி என்று சொன்னால், நிச்சயமாக அந்த கட்சி வேறு ஏதோ ஒரு திட்டத்தை தன் பக்கம் பலமாக வைத்துக்கொண்டு தான் இவ்வாறு செயல்களில் ஈடுபடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.