ஹரிஷ் கல்யாண் படத்துக்கு டைட்டில் வச்சாச்சு! ரிலீஸுக்கு வெயிட்டிங்!

Photo of author

By Parthipan K

ஹரிஷ் கல்யாண் படத்துக்கு டைட்டில் வச்சாச்சு! ரிலீஸுக்கு வெயிட்டிங்!

Parthipan K

இயக்குனர் கார்த்திக் சுந்தரின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா உள்ளிட்ட உள்ளிட்டோர் நடித்து பெரும் ஹிட்டாகின படம்தான் ‘பெல்லி சூப்புலு’.

கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இப்படம்  வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுந்தர். இவர் A.L விஜயின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்த நிலையிலும் கொரானா வைரஸ் பிரச்சினை காரணமாக இதுவரை எந்த அப்டேட்டும் இல்லாமல்  இருந்தது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா மற்றும் தருண் பாஸ்கர் இணைந்து வெளியிடுவார்கள் என்று கார்த்திக் தெரிவித்தார்.அவ்வாரே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய் தேவரகொண்டா வெளியீட்டு படத்தின் ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியுள்ளார். படத்திற்கு ‘ஓ மண பெண்ணே’ என்று தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர். மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ப்ரியாவும் ஹரிஷ் கல்யானும் செம்ம கெத்தா இருக்காங்க.