தமிழகமே கொண்டாடிய பாட்டில் சந்தேகம் கேட்ட டி எம் எஸ்!! பொறுமையாக விளக்கிய கண்ணதாசன்!!

0
11
TMS asked about the bottle that Tamil Nadu celebrated!! Kannadasan patiently explained!!
TMS asked about the bottle that Tamil Nadu celebrated!! Kannadasan patiently explained!!

இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளியான பாதகாணிக்கை திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு, கமல்ஹாசன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்ற பாடகர் டி எம் எஸ் பாடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் கண்ணதாசன் அவர்களுடைய பாடலை பாட சென்ற பொழுது அதில் உள்ள ஒரு பாட்டில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அந்த சந்தேகத்தை நேரடியாக சென்று கண்ணதாசனிடம் கேட்டு அதில் உள்ள ஒரு பாட்டில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அந்த சந்தேகத்தை நேரடியாக சென்று கண்ணதாசனிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கிறார். தமிழகமே கொண்டாடிய அந்த பாடல் ” வீடு வரை உறவு ” என்ற பாடல் தான்.

இன்று வரை இந்த பாடல்களை விரும்பாதவர்கள் என யாரும் இருக்க முடியாது இப்படிப்பட்ட பாடலை பாட சென்ற பொழுது தான் டி எம் சௌந்தரராஜன் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே நேரடியாக கண்ணதாசனிடம் சென்ற இவர் இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருக்கிறது என கேட்க, இந்த பாடலை நான் பட்டினத்தார் பாடலிலிருந்து மொழிபெயர்த்து என்றும் அதாவது எளிய தமிழ் நடையில் மொழிபெயர்த்தேன் என்றும் அதே நேரத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரின் மரணத்தில் நடந்த நிகழ்வுகளையும் நினைவில் வைத்து இந்த பாடலை இயக்கியதாக தெரிவித்திருக்கிறார்.

அப்பொழுது டீ எம் சௌந்தரராஜன் அவர்கள், பட்டினத்தார் அவர்கள் இறுதிவரை பாவமும் புண்ணியமும் தன்னுடன் இருக்கும் என எழுதி இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கடைசிவரை யாரோ என குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணதாசன் அவர்கள் ஒரு ஞானிகள் மட்டுமே கடைசிவரை பாவமும் புண்ணியமும் இருக்கும் என கூற முடியும் என்றும் நான் சாதாரண மனிதன் என்பதால் கடைசி வரை யாரோ என எழுதி இருப்பதாக விளக்கமளித்திருக்கிறார்.

Previous articleபாஜகவின் கோட்டையாக மாறும் தமிழ் தொலைக்காட்சி துறை!! சினிமாவில் தான் அரசியல் என்பதை உணர்ந்ததால் அதிரடி!!
Next articleஇப்பவே தங்கம் வாங்கவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவீர்கள்!! வீழ்ச்சியை சந்திக்கும் டாலர் மதிப்பு!!