வேளாண் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது..!! தமிழக அரசு..!!

0
164
TN Department of Agriculture

தமிழக அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் (TN Department of Agriculture) உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ் நாடு வேளாண்மைத் துறை அண்டை மாநிலங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது என தெரிவித்துள்ளது.

மேலும் அறிக்கையில் கூறியதாவது, ரூ.4,366 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை, ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, ரூ.614 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ரூ. 270 கோடி ரூபாயில் விவசாய எந்திரங்கள், ரூ.56 கோடியில் முதல்முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100% மானியம், ரூ.137 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம், ரூ.139 கோடியில் பயிர் பெருக்க திட்டம். ஆகிய திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகி உள்ளது என்றும், இதனால் உழவர்களின் வளம் பெருகி உள்ளது. மேலும் இதன் மூலம் தமிழ்நாடு வேளாண் துறையில் உணவு உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேளாண்மை துறையில் எடுத்து வரும் முயற்சிகளுக்காகவும். அடைந்து வரும் முன்னேற்றங்களுக்காகவும். பல விருதுகளை ஒன்றிய அரசு வழங்கி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் 4மணி நேரத்தில் 6 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்ததற்காக எலைட் உலக சாதனை புத்தகத்தில் தமிழ்நாடு இடம் பெற்றது என்றும், கடந்த 2023 ஆம் ஆண்டு மக்காச்சோளம் உற்பத்தி வீழ்ச்சியை தடுப்பதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சி திட்டங்களுக்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்ட SKOCH ஆர்டர் ஆப் மெரிட் விருதும் வழங்கப்பட்டது எனவும், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுதானிய மையத்திற்கான விருது இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: இனி லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டாம்..!! தனியார் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும்!!

Previous articleவரும் 25 ஆம் தேதி உருவாகிறது REMAL புயல்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
Next articleநான் மனிதப் பிறவியே அல்ல..!! பிரதமர் மோடி?