நான் மனிதப் பிறவியே அல்ல..!! பிரதமர் மோடி?

0
123
Narendra Modi

நாட்டில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில கட்சிகள், மத்தியில் உள்ள கட்சிகள் என்று தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். சமீப நாட்களாக மத்தியில் உள்ள இரு பெரிய கட்சிகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, அதன் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரமர் மோடி (Narendra Modi) கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின் போது இஸ்லாமியர்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவிக்க அது நாட்டு மக்களிடையே மதபிரிவினையை ஏற்படுத்துவதாகவும் அனைவரும் கருத்து தெரிவித்து வந்தனர். பிரதமராக இருந்துக்காெண்டு குறிப்பிட்ட மதத்தை மட்டும் இவ்வாறு கூறுவது ஜனநாயகம் இல்லை என்றும் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

அதுபோல கடந்த 20 தேதி ஒடிசா தேர்தல் பரப்புரையின் போது பாஜக வேட்பாளரான சம்பித் பத்ரா, அந்த மாநிலத்தின் பூரி நகரத்தில் அமைந்துள்ள ஜெகன்நாதர் கோயில் உள்ள கடவுள் ஜெகன்நாதரே பிரதமர் மோடியின் பக்தர் என தெரிவித்தார். அதற்கு பிறகு மோடி ஜெகன்நாதர் பக்தர் என கூறுவதற்கு பதிலாக மாற்றி கூறிவிட்டேன் என கூறினார். இந்நிலையில் அவருக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் அவர் நான் 3 நாட்கள் விரதம் இருக்க போவதாகவும் சம்பித் பத்ரா அறிவித்திருந்தார்.

இவ்வாறு தேர்தல் பரப்புரையில் பல சர்ச்சைகளும், சுவரஸ்ய நிகழ்வுகளும் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் மோடி ஒடிசாவில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி ஒன்று காெடுத்தார். அதில் நீங்கள் எப்படி ஓய்வில்லாமல் மக்கள் பணிக்காக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி கேட்க, அதற்கு மோடி நான் மனித பிறவியாக பிறக்க வாய்பே இல்லை என்றும், அதாவது நான் பயாலஜிகலாக பிறக்க வாய்ப்பில்லை, என் தாயார் இறந்த பிறகு நான் இதனை உணர்ந்ததாக கூறினார்.

என்னை பரமாத்மா தான் அனுப்பி உள்ளார் எனவும், இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் இதனை நான் நம்புகிறேன். ஏதோ ஒரு விஷயத்தை நடத்தி வைப்பதற்காக கடவுள் என்னை அனுப்பி உள்ளார் என தெரிவித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

மேலும் படிக்க: கிளாம்பாக்கத்திற்கு குட்பை.. கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்கும்..!!