ஆன்லைன் நீட் பயிற்சி அறிவிப்பு – பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் லிங்க் உள்ளே

Photo of author

By Parthipan K

கடந்த 201 7ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வு மருத்து படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படுகிறது.

பொதுவாக மே மாதத்தில் நடத்தப்படும் இத்தேர்வுகள் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் ஜூலை மாதம் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை நீட் தேர்வுக்காக இந்த ஆண்டு பதிவு செய்துள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி இனையதளம் வாயிலாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஜூன் 15-ம் தேதி முதல் துவங்கப்படவிருக்கும் இந்த பயிற்சியை
நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இனையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினந்தோறும் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என்ற வகையில் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் பயிற்சி பெற விரும்பும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதில் மாணவர்கள் பெயர், மின்னஞ்சல், பள்ளி முகவரி, மாவட்டம் ஆகியவற்றோடு நீட் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.