ஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு ஆப்பு வைத்த அழகிரி! அதிர்ச்சியில் திமுகவினர்!

Photo of author

By Sakthi

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே கருணாநிதியின் மூத்த மகனான மு க அழகிரி ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அவர் மதுரையில் அவரது ஆதரவாளர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் பேசிய விதமும் தெரிவித்த கருத்தும் திமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோமோ, இல்லையோ, ஆனால் திமுக நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது நான் வர விடமாட்டேன் என்று மு க அழகிரி ஆவேசமாக தெரிவித்தார் இதனால் திமுகவினர் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

வெகு காலமாக திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருக்கும் மு க அழகிரி சமீப காலத்தில் தனக்கும் திமுகவில் இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்டாலினை நாடினார். ஆனால் அதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் கடும் கோபமுற்ற முக அழகிரி எதிர்வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கவே முடியாது அதற்கு நான் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன் என்பது உங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.கருணாநிதி இருந்த சமயத்திலேயே கருணாநிதியின் மூத்த மகன் என்ற அடிப்படையில் திமுகவில் தனக்கு ஒரு இடத்தை வழங்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தவர் அழகிரி. ஆனால் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக வெற்றிகண்டு மத்திய அமைச்சராக அமர்ந்தார் முக அழகிரி.

இதனால் தனக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கருணாநிதியிடம் கோபித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே ஸ்டாலினுக்கு தமிழகத்தின் துணை முதல்வர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அதோடு மட்டுமல்லாமல் ஸ்டாலினை துணை முதல்வர் பொறுப்பில் அமர வைப்பதற்கும் கூட அழகிரியின் அனுமதியோடு தான் கருணாநிதி செயல்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஸ்டாலின் தான் துணை முதல்வரான பிறகு திமுகவில் தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். முடிவு மு க அழகிரி திமுகவில் இருந்து மொத்தமாக ஓரம் கட்டப்பட்டார்.

இந்த நிலையில் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் எப்படியாவது காட்சியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஸ்டாலினை அணுகி பார்த்தார். ஆனால் ஸ்டாலின் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை அதன்பிறகு ஸ்டாலினுக்கு எதிராகவே அவர் மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.அதன் விளைவாக சமீபத்தில் மதுரையில் தன் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த முக அழகிரி எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனோ இல்லையோ ஆனால் திமுக ஆட்சி அமைக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்தார்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் அழகிரியை அண்ணன் என்று குறிப்பிட்டார். இதனையே ஒரு காரணமாக வைத்து அவருக்கும் அழகிரிக்கும் இடையில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.ஆனால் தற்சமயம் மு க அழகிரி தீவிர ஆதரவாளர் ஒருவர் அண்ணன் அழகிரி ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார் அதில் தி மு கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார். ஆனால் அது தொடர்பாக விசாரணை செய்தபோது அது உண்மை அல்ல என்று தெரிய வந்தது.

ஆனாலும் அந்த ஆதரவாளர் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் திமுகவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும் மற்ற கட்சிகளுக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என அழகிரி அண்ணன் தெரிவித்து வருகிறார் என்பது போன்ற கருத்தை திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறார் இதனால் திமுக அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.