முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

Photo of author

By Sakthi

நீட் தேர்வு காரணமாக, தமிழக மாணவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இந்த தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. இதன் காரணமாக, கிராமப்புற மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் திமுக அரசு அமைந்தவுடன் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே இதற்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.அதற்கேற்றவாறு நீட் தேர்வின் தாக்கம் பாதிப்பு மற்றும் மாற்று வழி தொடர்பாக ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு. அத்துடன் சென்ற ஜூன் மாதம் 17ஆம் தேதி பிரதமரை சந்தித்த தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதே நேரத்தில் நீட் தேர்வு இந்த நிமிடம் வரையில் நடைமுறையில் இருப்பதன் காரணமாக, அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. இது மாணவர்களின் கடமை நீட் தேர்வுக்கு தயாராவது எந்த விதமான பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் பதினாறாவது சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பமானது முதல் நாளான இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். அந்த சமயத்தில் முன்னாள் நீதிபதி இலக்கிய ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவைப்படும் சட்டங்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் இந்த அரசு நிச்சயம் எடுக்கும் என்று ஆளுநர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.