2025 – 26 நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவுப்புகளை அறிவித்தார். அவை என்னவென்று பார்ப்போம்.
350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம்..
50 கோடி மதிப்பீட்டில் கடல்சார் வள அறக்கட்டளை..
70 கோடியில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்.
ஒரு கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். இவற்றில் சென்னை: 950, மதுரை: 100, கோயம்புத்தூர்: 75 பேருந்துகள் இயக்கப்படும்,
100 கோடியில் சென்னையில் அறிவியல் மையம் .
விண்வெளித் தொழில்நுட்ப நிதி – ரூ.10 கோடி ஒதுக்கீடு.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம், அரசு உதவிபெறும் பள்ளிகள் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 3.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
77 கோடியில் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்.
275 கோடி செலவில் சென்னை, கோவை, மதுரையில் 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்.
10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் 37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்படும்.
மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை பலன் பெறாதவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும். இதில் பல ஆயிரம் பேர் வசிக்க ஏற்பாடு செய்யப்படும்.
சென்னை வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும்.
2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்தின் முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும், இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,500 கோடி செலவில் ஊரகப் பகுதிகளில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
சீரமைக்க இயலாத வீடுகளுக்கு பதிலாகப் புதிய வீடுகள் என்ற வகையில் 600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.