போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்த இனிப்பான செய்தி! பொதுமக்கள் சற்றே நிம்மதி!

Photo of author

By Sakthi

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்து இருப்பதால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விலை உயர்வு காரணமாக, பலரும் தற்சமயம் மோட்டார் வாகனங்களை பயன்படுத்த இயலாமல் சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பழைய சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு உண்டாக்கி இருக்கிறது. அதோடு பழைய சைக்கிளை சரி செய்யும் கடைகளிலும் கூட்டம் வெகுவாக அலைமோதிக் கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருந்தாலும் தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் உயராது என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவச பயணம் காரணமாக, அதிக மகளிர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் தற்சமயம் 15227 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கின்றார். இதில் மலைப் பகுதிகளில் மட்டும் 498 பேருந்துகளும் அதோடு சென்னையில் 2650 மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

போக்குவரத்து துறையில் காலியாக இருக்கின்ற சுமார் 7000 பணியிடங்களில் புதிய பணியாளர்களை நிரப்ப இருக்கின்றோம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இருந்தாலும் கூட தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் உயராது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.