அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் தலைமைச்செயலாளர் ஆலோசனை! காரணம் என்ன தெரியுமா?

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 16 தாண்டி இருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் நோய்த்தொற்று பரவல் குறைவதாக தெரியவில்லை.ஆகவே இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், போன்றோர் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாகவும், ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நேற்று தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக ஆலோசனை செய்ததற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பிறகு சென்னை கிண்டியில் இருக்கின்ற ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.