மாநில முதல்வர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் ஸ்டாலின்! என்ன நடக்க போகிறது?

0
142

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில், நாளுக்கு நாள் மக்களிடையே நோய் தோற்று குறித்த பயமும் அதிகரித்து வருகின்றது. பொருளாதார நிலையை கருத்தில் வைத்து மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கடன்களை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னரை நாம் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அந்த கடிதத்தில் 5 கோடி ரூபாய் வரையில் நிலுவைத் தொகை கடன் வைத்திருக்கின்ற சிறு குறு நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வார கால அவகாசம் மீண்டும் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்ததால் இலவச நோய்த்தொற்று தடுப்பூசி அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அதேபோல இந்த விவகாரத்திலும் நாம் சிறு குறு நிறுவனங்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்

Previous articleஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்!
Next articleமத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!