பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

Photo of author

By Sakthi

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை குறைந்து இருக்கின்ற சூழலில், மத்திய மாநில, அரசுகள் வழங்கி இருக்கின்ற தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காத பட்சத்தில் இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அச்சம் தோன்றியிருக்கிறது.

இதன் காரணமாக, தமிழக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவில் தடுப்பூசி கொடுக்கப்படுவதால் சில சமயங்களில் பல தடுப்பூசி மையங்கள் மூடியே இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில், தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் தொற்று தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது. இதனை மத்திய அரசு நினைவில் கொண்டு உடனடியாக ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

அத்துடன் தமிழகத்தின் மக்கள் தொகையையும் நினைவில் வைத்து மத்திய அரசு கூடுதலான தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் குறைந்த அளவு தடுப்பூசிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

குறைந்த அளவு தடுப்புசி ஒதுக்கீடு செய்யப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார். இது நோய்தொற்று பரவலை அதிகரிக்கும் செயலை முன்னெடுக்கும் என்றும் தடுப்பூசி விநியோகத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.