தேர்தல் ஆணையத்திற்கே அதிர்ச்சி கொடுத்த ஆசாமிகள்! ஆடி போன தேர்தல் ஆணையம்!

0
151

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலின் போது அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட ஒன்பது மாதங்களுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்து இருந்தது. இதற்கு இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதாவது தடை செய்யப்பட்டு இருக்கின்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இந்த தேர்தலை நடத்துவதற்கு 6 மாத கால அவகாசம் கேட்டது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் இன்றைய தினம் வெளியிட்டிருக்கின்ற ஒரு முக்கிய செய்திக்குறிப்பில் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான சாதாரண தேர்தல் அறிவிக்கை களையும் மற்ற இழுத்து இழுத்து மாவட்டங்களுக்கு முற்பட்ட பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கின்ற இடங்களுக்கு தற்செயல் தேர்தல் அறிக்கைகளையும் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.ஆகவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி இடங்கள் ஏழாம் விடப்படுவதாக நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது.

அதாவது அந்த சுற்றறிக்கையில், தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மக்களாட்சித் தத்துவத்தை இருக்கும் எதிர்மாறாக நடைபெறும் இதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் கண்டிக்க தக்க வகையில் இருக்கிற இதுபோன்ற செயல் தண்டனைக்கு உரிய குற்றம் எனவும், பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகள் எப்படி ஏலம் விடப்படலாம் பொது மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் இது என்பதால் ஜனநாயகத்திற்கு எந்த ஒரு கேடும் நடந்து விடாத வண்ணம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானதாக இருக்கிறது என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில், போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதோடு இது போன்ற செயல்கள் நடக்காதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட இந்த சுற்றறிக்கையின் மூலமாக மாவட்ட நிர்வாகங்களுக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டு இருக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆக இருக்கவேண்டும் என்ற காரணத்தால், தேர்தல் அறிவிக்கப்பட்ட அனைத்து பதவிகளும் தேர்தல் மூலமாக நிரப்பப்பட வேண்டும். ஆகவே இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகங்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

Previous articleஇனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்!
Next articleமூன்றாவது ஆண்டாக ஆரவாரமில்லாத தியாகிகள் தினம்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தியாகிகளுக்கு வீரவணக்கம்!