தோல்வி பயத்தில் விழி பிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சி!

Photo of author

By Sakthi

கடந்த 6ஆம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தவுடன் அனைத்து வாக்குப் பெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கே துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றன.

ஆனால் எதிர்க்கட்சியான திமுகவோ தற்போது நடைபெற்ற தேர்தலில் தேர்தல் ஆணையமும், மத்திய மாநில அரசுகளும், சூழ்ச்சி செய்து இருப்பதாகவும் கண்டெய்னர் லாரிகள் மூலமாக வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும் தெரிவித்து வருகிறது.அதேபோல கண்டெய்னர் லாரிகளில் ஆண்டனா போன்றவைகளை வைத்து அதன் மூலம் வாக்குப் பெட்டியில் வாக்குகளை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று அந்த கட்சி குற்றம்சாட்டி வருகிறது

ஏற்கனவே தேர்தல் ஆணையம் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு திமுகவினருக்கு இது குறித்து விளக்கம் அளித்தார்.

அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பே கிடையாது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது கால்குலேட்டர் போன்றது. எந்த ஒரு அலைவரிசையை கொண்டும் அதனை இயக்கி விட இயலாது என்று தெரிவித்து இருக்கிறார்.ஆனால் திமுகவை சார்ந்தவர்களோ தோல்வி பயத்தின் காரணமாக, இவ்வாறு எதையாவது அவ்வப்போது வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.