தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு!

Photo of author

By Sakthi

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, வரும் 12-ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் ஆரம்பமாக இருக்கிறது. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறாது என்று தெரிவித்திருக்கிறார்.

சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சுமார் 88 ஆயிரத்து 936 வாக்குப்பதிவு மையங்கள் வாக்கு பதிவிற்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 892 தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள் என்று தெரிவித்த சத்யபிரதா சாகு, தமிழ்நாடு முழுவதிலும் 76 வாக்கு எண்ணிக்கையை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்களிப்பதற்கு வரும் எல்லோருக்கும் கையுறை வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தேர்தல் குறித்த எல்லாவிதமான புகார்களும் 1950 என்ற என்னை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே 50 சதவீத வாக்குப்பதிவு மையங்கள் கேமரா மூலமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

முன்னதாக தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில், வாக்குச்சாவடி மையங்களில் அந்த பகுதிக்கு தேவையான அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. அதேபோல வாக்களிக்க தேவையான பெட்டிகளும் அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல பட்டு இருக்கின்றன. தேர்தல் நடைபெறுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னால் அந்தந்த கிராமங்களுக்கு பெட்டிகள் அனைத்தும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல எடுத்துச்செல்லப்பட்டு பின்பு அங்கே காவல்துறையினரின் பாதுகாப்புடன் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக தபால் வாக்கு என்ற முறை இந்த தேர்தலில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.அதோடு மாவட்டம் தோறும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு முறைகேடாக எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.