10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கட் இனையத்தில் வெளியிடப்பட்டது – டவுன்லோட் லிங்க் உள்ளே

Photo of author

By Parthipan K

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பொது தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது. அதன்படி, ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன.

ஜூன் 18ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் நடக்கின்றன.

இதற்கான அனுமதி சீட்டினை அரசு தேர்வுகள் இயக்கம் மாணவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இணையதள வசதி இல்லாத மாணவர்கள், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அதனை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களும் இணையதளத்தில் அனுமதி சீட்டினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.