நகை கடன் தள்ளுபடி விவகாரம்! அந்தர் பல்டி அடிக்கும் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தமிழ்நாடு முழுவதும் நகை கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கி நகை கடன் வாங்கியவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் முறையில் நகை கடன் வாங்கியவர்களுக்கு அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்து 100 தினங்களை கடந்து விட்ட நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவினை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அதேசமயம் தமிழக அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு பல்வேறு நிபந்தனைகளை இதற்காக விதித்து இருக்கிறது தமிழக அரசு. கடன் தள்ளுபடி பெறுவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்கள் இருசக்கர வாகனம் கார் உள்ளிட்டவைகளை வைத்திருக்கிறார்களா? என்று சோதனை செய்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து உண்மையான நிலை என்ன என்று அறிவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னரே வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியில் பலன் அடைந்தவர் அரசு ஊழியர் கூட்டுறவு சங்க ஊழியர்களின் உறவினரா? அவருடைய குடும்பத்தின் வேறு நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள் மற்றும் சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார் என்பது போன்ற பல விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த விவரங்கள் அனைத்தும் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு கடன் தள்ளுபடி வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், அதோடு ஏற்கனவே கடன் தள்ளுபடி பெற்றவர்கள் வெளியிடுவதற்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படாது என்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஆசிரியர்களுக்கான பென்ஷன் திட்டத்தை மறுபடியும் அமல்படுத்துவோம் என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அதனை இதுவரையில் செயல்படாததால் தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டதுதற்சமயம் ஏழை எளிய மக்கள் வாங்கிய நகை கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அநேக கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக சொல்லப்படுவது வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு இதனைக் கேள்விப்பட்ட பாமரமக்கள் தமிழக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.