வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ…!

0
159

தமிழகத்தில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

வேளாண்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நவீன தொழில்நுட்பங்களை அரசு அதிகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் மகசூல் அதிகம் பெற வேண்டும் என்ற நோக்கிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல விருதுகளையும் அறிவித்து வருகிறது.

இந்நிலையில்,2022-2023-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ரூ.2 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த பரிசு தொகைக்கு எப்படி யார் யார் விண்ணப்பைப்பது என தெரிந்து கொள்ளுவோம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழகம் முழுவதிலும் உள்ள வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் அனைத்து விவசாயிகளும் இந்த பரிசு தொகைக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு எதுவும் இல்லை. அவர்கள் உழவன் செயலியில் உள்ளா படிவத்தில் 1000 பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பபடிவத்தில் என்ன விவரங்கள் தர வேண்டும்?

விண்ணப்பத்தாரரின் பெயர், ஆதார் எண், தந்தை பெயர், முகவரி ஆகியவை இடம் பெற வேண்டும்.ஏற்றுமதி செய்த வேளாண் பொருட்களின் அளவு, எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யபட்டது, பயிர் செய்ய மேற்கொள்ளப்பட்ட முறைகள், கூடுதல் வருமானம் ஈட்டிய வழிமுறைகளை விண்ணப்பபடிவத்துடன் சேர்க்க வேண்டும்.

விண்ணப்பத்தில் பதிவு கட்டணம் செலுத்திய பின் ரசீதின் எண்ணும் தேதியும் குறிப்பிட வேண்டும்.

மாநில, மாவட்ட அளவிலான தேர்வு குழு :

விண்ணப்பங்கள் பெறப்பற்ற பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்கள் சாதனைகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேற்வுகுழுவின் விளக்க வேண்டும். அவர்கள் விவரங்களின் அடிப்படையில் மாநில தேர்வு குழுவிற்கு தங்களது பரிந்துரைகளை அனுப்புவர்.

அதன்பின்னர், மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளில் இருந்து வெற்றியாளரை தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் தலைமையிலான தேர்வு குழு தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும்.

இந்த போட்டி விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதால் வேளாண் ஏற்றுமதி செய்யும் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள அரசு கேட்டு கொண்டுள்ளது.

Previous articleவைட்டமின் A நிறைந்த கேரட்.. நாவூற வைக்கும் பாயசம் எப்படி செய்வது?
Next articleமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோருக்கு அவகாசம் வழங்கிய மின்வாரியம்..!