கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ஒரே நாடு ஒரே வழி என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவை சரக்கு உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் சரக்கு மற்றும் சேவை வரி என்று ஜிஎஸ்டி என்ற பெயரில் வரி விதிக்கப்பட்டு அதற்கான சட்டம் கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவில் பல வரிகள் செலுத்தப்பட்டு வந்தன. இதனால் பொதுமக்கள் கூடுதலாக வரி செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. இதன்காரணமாக, அரசாங்கத்திற்கு போதுமான வருவாய் கிடைத்தாலும் கூட பொதுமக்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.அதனடிப்படையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அனைத்து பொருட்கள் மற்றும் சேவை உள்ளிட்ட அனைத்திற்கும் சரக்கு மற்றும் சேவை வரி என்று 2 விதமான வரிவிதிப்பு மட்டுமே கொண்டுவரப்பட்டது.
இதனால் பல வரிவிதிப்புகள் குறைக்கப்பட்டன ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட விலை மற்றும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர படாமல் இருந்தது. இதற்கு மாநில அரசுகள் சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் இதனை அமல்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்தது.இந்த நிலையில், நேற்றைய தினம் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேசத்தில் இருக்கக்கூடிய லக்னோவில் நேரடியாக தொடங்கியது இதில் தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று இதற்கு முன்னால் போராட்டம் போன்றவற்றை நடத்தியது. தற்போதைய ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தான் ஆனால் தற்சமயம் இந்த முறையை எதிர்ப்பதும் திமுக தான் இதிலிருந்தே திமுகவின் இரட்டை வேடம் தெரிந்துவிட்டது என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.