கர்நாடகாவின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு! செவிசாய்க்குமா மத்திய அரசு?

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டிற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. ஒருவேளை அந்த பகுதியில் அணை கட்டப்பட்டு விட்டால் தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து கொண்டிருக்கும் காவேரி நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துச் சென்று இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழலில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் பிரதிநிதி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கருத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றார். அதோடு அவருடைய இந்த முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து இருக்கின்றார். மேகதாது மட்டுமல்லாமல் காவேரி ஆற்றின் குறுக்கே எந்த பகுதியில் அணை கட்டினாலும் எங்களுடைய அனுமதி வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார்.

அத்தோடு அவசரம் காரணமாக திறக்கப்படும் உபரி நீரை தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.