பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் – தமிழக அரசு அறிவிப்பு

0
107

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பொது தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது. அதன்படி, ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன.

ஜூன் 18ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான ஹால் டிக்கட் கடந்த 3ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கட் பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளிலிருந்து இலவசமாக இரண்டு மறு பயன்பாட்டு, முக கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 46 லட்சத்து 37 ஆயிரம் முககவசம் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும், கைகழுவும் சோப்பு மற்றும் சானிடைசர்க வைக்கப்பட்டிருக்கும். தேர்வு எழுதும் மாணவர்கள், பங்கேற்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், சமூக இடைவெளியையும், முக கவசம் அணிவதையும், கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Previous articleஎன்னம்மா இப்படி பன்றீங்களேமா? – கொரோனா விதிகளை காற்றில் விட்ட திருச்சி, ஈரோடு மற்றும் நெல்லை வாசிகள்
Next articleபொதுமக்களுக்கு தரிசனம் – இன்று முக்கிய முடிவை வெளியிடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்