10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு

0
142

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு

மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்த திட்டமிட்டிருந்தது தமிழக கல்வி துறை. அதற்க்கான அட்டவனை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைத்தது தமிழக அரசு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழ்நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது அரசு. 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் குறித்த மாறுபட்ட செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. 10ம் வகுப்புக்கும் தேர்வு வைக்காமல் திருப்புதல் தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை அறிவிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு அடிப்படி கல்வி தகுதியாக கருத்தப்படுவதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார்

கடந்த வாரம் கல்லூரிகளை நெறிமுறை படுத்தும் UGC எனப்படும் பல்லைக்கழக மானியக்குழு, கரோனா சூழல் சரியானால் ஜூலை மாதம் டெர்மினல் செமஸ்டர் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் நிலைமை சீரடையாவிட்டால் பின்னர் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

Previous articleஅறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
Next articleஇதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை