காவிரி டெல்டா தூய்மைப்படுத்தும் பணிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்த தமிழக அரசு!

Photo of author

By Sakthi

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், போன்ற டெல்டா மாவட்ட பகுதியில் இருக்கின்ற காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கு தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் அவர்கள் கண்காணிப்பு அதிகாரியாகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு கோபால் கண்காணிப்பு அதிகாரியாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அபூர்வா கண்காணிப்பு அதிகாரியாகவும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிர்லேஷ்குமார் கண்காணிப்பு அதிகாரியாகவும், நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஒன்றினைந்து காவிரி டெல்டா பகுதிகளில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வபோது தூர்வாரும் பணிகள் குறித்த அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.