தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

Photo of author

By Mithra

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

Mithra

tn assembly

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் தமிழக அரசு விதித்துள்ளது.

அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பிவிட்டதால், அம்மாநில அரசுகள் தவித்து வருகின்றன. தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இதே போன்றதொரு நிலை உருவாகும் சூழல் நிலவுகிறது.

இதனால், மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அனைத்தும், பொது சிகிச்சையை குறைத்துக் கொண்டு, 50% படுக்கைகளை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

இந்த ஆணையை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களுக்கு விரைந்து மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என தமிழக அரசு நம்புகிறது.