கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும்,
இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கான அரசானை தமிழக அரசால் இன்று வெளியிடப்பட்டடது.
அதன் படி சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30% மற்றும் இந்த பருவத்தில் அகமதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அக மதிப்பீட்டிலிருந்து 70% மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து 100% வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றை வைத்தே முதன்மை,மொழி பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் துணைப்பாடம் மற்றும் விருப்பபாடங்களுக்கும் 100% அக மதிப்பீட்டின் அடிப்படையிலே வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.