மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் தலைவர் திரு என். சங்கரய்யா அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திர தின விழா கொண்டாடப்படும் சமயத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் இந்த விருது வழங்கப்படும். தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் மற்றும் அதன் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது உருவாக்குவதற்கும், இந்த விருதுக்கான விருதாளர் ஐ தேர்வு செய்திடவும், ஒரு குழுவை அமைத்திடவும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னரே ஆணையிட்டு இருந்தார்.இந்த விருதுக்கான விருதாளர் ஐ தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் இளம்வயதிலேயே பொதுவாழ்வில் ஈடுபட்டு இளம் தலைவராகவும், சுதந்திர போராளியாகவும், சட்டசபை உறுப்பினராகவும், பணியாற்றியதுடன் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கை அளித்து சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரையா அவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இந்த வருடத்திற்கான தகைசால் தமிழர் விருதிற்கு அவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இந்த விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
தகைசால் தமிழர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கர் ஐயா அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.