தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. கடைசி கட்டத்தில் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி கலவரம் உண்டானது. இந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த விவகாரம் தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதோடு இளைஞர்களின் எதிர்கால படிப்பினை உறுதி செய்யும் வகையில், அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சித்தலைவர்கள் மீது தொடுக்கபட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சிபிஐ விசாரணைக்கு மாற்ற பட்ட வழக்குகளை தவிர்த்து 38 வழக்குகளை தமிழக அரசு திரும்பபெற்றிருக்கிறது.
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று உத்தரவிட்டிருக்கிறார். இதன் வழியாக நல்லகண்ணு, தினகரன், வைகோ, கீழ்ப்பாக்கத்தில் பெண் மருத்துவர் சிபிஎஸ் அனிதா ராதாகிருஷ்ணன் அழகு முத்து பாண்டியன், ராஜா உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.