நீட் தேர்விற்கு தயாராகும் தமிழக மாணவர்கள்! திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று!

0
167

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே போடும் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்தாக தான் இருக்கும் என்று பிரச்சாரத்தை முன்வைத்தார்கள். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து நடக்கும் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்து அதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் எனவும், திமுகவைச் சார்ந்த பலரும் தெரிவித்து வந்தார்கள்.

இந்த தேர்தலில் பெருந்தன்மையான இடத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து இருக்கின்ற திராவிடர் முன்னேற்றக் கழகம் தன்னுடைய நீட் தேர்வு ரத்து என்ற முதல் கையெழுத்தும் போடவில்லை, அதோடு முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து சட்டம் இயற்றப்படும் என்று கூறியிருந்தார். அதையும் இதுவரையில் செய்யவில்லை அதற்கு மாறாக நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஆணையம் மட்டுமே அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதனை வலியுறுத்தும் விதமாக சட்டசபை எதிர்க்கட்சி என்ற இடத்தில் இருக்கும் அதிமுக தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றும்போது தமிழ்நாட்டின் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா?முதலில் தேர்தலில் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று இது தொடர்பாக முதலமைச்சர் விரிவான விளக்கத்தை கொடுத்தால்தான் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இயலும் என்று நான் எழுப்பிய கேள்விக்கு சென்ற வருடம் நடந்தது போலவே இந்த வருடமும் நீட் தேர்வு நடைபெறும் என்று விளக்கம் அளித்தார்கள். என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 716 பேர் இன்று நீட் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.தமிழ்நாட்டின் சென்ற வருடத்தைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவாக நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். அதோடு 19 ஆயிரத்து 867 நீட் தேர்வு தமிழில் எழுத விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். மருத்துவ படிப்புக்கான இந்த தேர்வு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Previous articleகளங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்!
Next articleதிமுக சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! முக்கிய நிர்வாகி களுக்கு இடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை!